📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:40
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

கோபிசெட்டிபாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

செய்தி சுருக்கம்: தாமு செட்டியார் நகை மாளிகை மற்றும் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு பார்வை சேவை
கோபி ..தாமு செட்டியார் நகை மாளிகை அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
கோபிசெட்டிபாளையம் தாமு செட்டியார் நகை மாளிகை கோபி அரிமா சங்கம் சார்பில் கடந்த 30 வருடங்களாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது முகாமில் நோயாளிகளுக்கு கண்ணில் புரை உண்டாகுதல் மாறுகண் நீர் அழுத்த நோய் மாலைக்கண் நோய் சீழ் நீர் வடிதல் தூரப்பார்வைஆகியவைகள் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு செய்யப்பட்டது முகாமில் 145 பேர் கலந்து கொண்டனர் அறுவை சிகிச்சைக்காக 62 பேர் தேர்வு செய்யப்பட்டு பஸ் வசதியுடன் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் அனைத்து நோயாளிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் கோபி அரிமா சங்க தலைவர் சுரேஷ் செயலாளர் வி செந்தில் கிருஷ்ணன் செயலாளர் நிர்வாகம் அரிமா கௌதம் சேவை அரிமா செயலாளர் கணேசன் மூர்த்தி அரிம சங்க பொருளாளர் ஜெகதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கண்பார்வை கிடைக்க தாமு செட்டியார் நகை மாளிகை உரிமையாளர் சேகர் மற்றும் அரிமா சங்க மூலம் சார்பாக வழிவகை செய்யப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி 02/02/2026 | பார்வைகள்: 39

x