📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:40:38
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது

செய்தி சுருக்கம்: மாணவர் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதலுடன் சிறப்பு விருந்தினரின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நாற்காலி நன்கொடை அறிவிப்பு
நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா

நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா 05-02- 2026 காலை 11 30 மணி அளவில் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சூரியகாந்தி அவர்கள் தலைமை ஏற்று மாணவர் பேரவையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறை தலைவர் முனைவர் நாகேந்திரன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.

கணிதவியல் துறை தலைவர் முனைவர் தமிழ்மணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வணிக நிர்வாகவியல் துறையின் தலைவர் முனைவர் யூனஸ் அவர்கள் வாழ்த்துரை மற்றும் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்கள்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோபிசெட்டிபாளையம் ஜெகன் மெட்டல் மார்டின் மேலாண்மை இயக்குனர் திரு பாலசிங் எம் பி ஏ அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு உரையை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள். மாணவ மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற தேவையான வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

சிறப்பு விருந்தினர் திரு பாலசிங் அவர்கள் கல்லூரியின் கலையரங்கத்துக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள 400 நாற்காலிகள் வழங்குவதாக தெரிவித்தார்கள். சிறப்பு விருந்தினரின் கொடை வள்ளல் பண்பை எண்ணி கல்லூரியின் முதல்வர், துறை தலைவர்கள், இருபால் ஆசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் மிகவும் பாராட்டினார்கள்.

மாணவர் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவ மாணவிகள் உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள்.‌

இறுதியாக மாணவர் பேரவை தலைவர் நன்றியுரை வழங்கினார்கள் . விழாவினை தமிழ் துறை மாணவ மாணவிகள் தொகுத்து வழங்கினார்கள். இவ்விழா நாட்டு பண் உடன் இனிதே நிறைவேறியது.
வெளியிடப்பட்ட தேதி 25/02/2026 | பார்வைகள்: 40

x