📱 +91-81223 18122 ✉️ info@examplemail.com
22/05/2026 23:41:07
வாள் முனையை விட பேனா முனை கூர்மையானது

பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது

செய்தி சுருக்கம்: நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முனைவர் யூனஸ் அவர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகள் வழங்கப்பட்டது
நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நிறைவு பாராட்டு நிகழ்ச்சி

நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறையில் துறை தலைவராக பணியாற்றுகிற முனைவர் யூனஸ் அவர்கள் பணி நிறைவு பொருட்டு பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல இணை இயக்குனர் முனைவர் செண்பகலட்சுமி அவர்கள் முனைவர் யூனஸ் அவர்களை பாராட்டி வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சூரியகாந்தி அவர்களும் கணிதவியல் துறை தலைவர் முனைவர் தமிழ்மணி அவர்களும் வணிகவியல் துறை தலைவர் நாகேந்திரன் அவர்களும் கல்லூரியின் நிதியாளர் திரு அஜந்தகுமார் அவர்களும் கல்லூரியின் கண்காணிப்பாளர் திரு சம்பத்குமார் அவர்களும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி 10/04/2026 | பார்வைகள்: 32

x